Sunday 28 February 2016

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 31

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 31


அத்தியாயம் 31 மனிதனின் இழி நிலை

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


 நீர்க்குமிழி போன்ற இந்த நசுவரமான வாழ்வை நித்தியம் என்று எண்ணி மனிதர்கள் ஆடுகின்ற கோமாளி செய்கைகளை நகைச்சுவையுடன் விமரிசிக்கிறார் பூந்தானம் அடுத்த சில வரிகளில்.
സ്ഥാനമാനന്ഗള് ചൊല്ലിക്കലഹിച്ചു
നാണമ് കെട്ടു നടക്കുന്നിതു ചിലര്
മദമത്സരമ് ചിന്തിച്ചു ചിന്തിച്ചു
മതികെട്ടു നടക്കുന്നിതു ചിലര്
ஸ்தானமானங்கள்  சொல்லிக்கலஹிச்சு
நாணம் கெட்டு நடக்குன்னிது சிலர்
மதமல்ஸரம் சிந்திச்சு சிந்திச்சு
மதிகெட்டு நடக்குன்னிது சிலர்
பதவி,அதிகாரம் போன்றவைகளால் தன்னை மறந்து அகந்தையால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு காலத்தைக் கழிக்கின்றனர் சிலர். அவர்களுக்குத் தெரிவதில்லை இன்றி மாட மாளிகைகளில் வசிப்பவரை ஒரு நொடியில் குப்பை மேட்டிற்கு கொண்டு வருவதும் தெருவில் இருப்பவனை அரசகட்டிலில் உட்கார வைப்ப்பதும் அந்த கிருஷ்ணனின் லீலா விலாசம் என்று.வெட்கம், மானம் எதுவும் இல்லாமல் ‘நானே பெரியவன்’ ‘நானே அறிவாளி” என்று மதிகெட்டு நடக்கிறார்கள்

ചന്ചലാക്ഷിമാര് വീടുകളില് പുക്കു
കുന്ചിരാമനായാടുന്നിതു ചിലര്
കോലകന്ഗളില് സേവകരായിട്ടു
കോലമ് കെട്ടി ന്ജെളിയുന്നിതു ചിലര്
சஞ்சலாக்ஷிமார் வீடுகளில் புக்கு
குஞ்சிராமனாயாடுன்னிது சிலர்
கோலகங்களில் ஸேவகராயிட்டு
கோலம் கெட்டி ஞெளியுன்னிது சிலர்.
இன்னும் சிலரோ அழகிய மாதர் பின் சென்று அவர்களால் குரங்காட்டம் ஆடுகிறார்கள். எப்படி குரங்காட்டி ஒரு கம்பை வைத்துக்கொண்டு குரங்கை இதைத் தாண்டு, இதைத் தாண்டு, இப்படிக் குதி, அப்படிக் குதி என்று சொல்வதற்கெல்லாம் மறு பேச்சு பேசாமல் ஆடுமோ அது போல் சில மனிதர்கள் அழகிய கண்களையுடைய விலைமாதர் தம் கண் அசைவிற்க நுசரணையாக காரியங்கள் ஆற்றுகிறார்கள்.
சில மதி கெட்ட மாந்தர் அரச மாளிகைகளில் சேவகம் செய்துகொண்டு, வெளியே சீமாங்கள் போல் நெளிந்து நடமாடுகிறார்கள்.
ശാന്തി ചെയ്തു പുലര്ത്തുവാനായിട്ടു
സന്ധ്യയോളമ് നടക്കുന്നിതു ചിലര്
അമ്മൈക്കുമ് പുനരച്ചനുമ് ഭാര്യയ്ക്കുമ്
ഉണ്മാന്പോലുമ് കൊടുക്കുന്നില്ല ചിലര്
சாந்தி செய்து புலர்த்துவானாயிட்டு
சந்த்ய்யோளம் நடக்குன்னிது சிலர்
அம்மைக்கும் புனரச்சனும் பார்யைக்கும்
உண்மான்போலும் கொடுக்குன்னில்லது சிலர்
மற்ரு பலர் கோயில்களில் பூஜை செய்து காலை முதல் இரவு வரை பகவத் கைங்கரியம் செய்து பிழிப்பு நட்த்துகிறார்கள்.ஆனால் பெற்ற தாய்க்கும் தகப்பனுக்கும் மனைவிக்கும் உணவிற்கான பொருள் கூட கொடுப்பதில்லை. என்னே அவர்கள் பக்தி ! அவர்களது பக்தியின் பொய்மையை பூந்தானம் எள்ளி நகையாடுகிறார் இங்கு.
അഗ്നിസാക്ഷ്ണിയായൊരു പത്നിയെ
സ്വപ്നത്തില്പോലുമ് കാണുന്നില്ല ചിലര്
அக்னிஸாக்ஷிணியாயொரு
பத்னியெ
ஸ்வப்னத்தில் போலும் காணுன்னில்ல சிலர்
அப்படிப்பட்டவர்கள் அக்னி சாக்ஷியாய் கைபிடித்த மனைவியை கனவில்க் கூட காண்பதில்லை.இவர்களா பக்திமானகள்?
സത്തുക്കള് കണ്ടു ശിക്ഷിച്ചു ചൊല്ലുമ്ബോള്
ശത്രുവെപ്പോലെ ക്രുദ്ധിക്കുന്നു ചിലര്
വന്ദിതന്മാരെക്കാണുന്ന നേരത്തു
നിന്ദിച്ചത്രേ പറയുന്നിതു ചിലര്
ஸத்துக்கள் கண்டு சிக்ஷிச்சு சொல்லும்போள்
சத்ருவெப் போலெ க்ருத்திக்குன்னு சிலர்
வண்திதன்மாரெக்காணுன்ன நேரத்து
நிந்திச்சத்ரே பறயுன்னிது சிலர்
இதைக் கண்டு யாராவது நல்ல மனிதர்கள் கடிந்து கொண்டாலோ அவர்களை எதிரியாக பாவித்து கொடுஞ்சொற்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.
കാണ്ക നമ്മുടെ  സമ്സാരമ് കൊണ്ടത്രേ
വിശ്വമീവണ്ണമ് നില്പുവെന്നുമ് ചിലര്
ബ്രാഹ്മണ്യമ് കൊണ്ടു കുന്തിച്ചു കുന്തിച്ചു
ബ്രഹ്മാവുമെനിക്കൊക്കായെന്നുമ് ചിലര്
காண்க நம்முடெ ஸம்ஸ்காரம் கொண்ட்த்ரெ
விஸ்வமீவண்ணம் நில்பூவென்னும் சிலர்
ப்ராஹ்மண்யம் கொண்டு குந்திச்சு குந்திச்சு
ப்ரஹ்மாவுமெனிக்கொக்காயென்னும் சிலர்
வேறு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் “இந்த பிரபஞ்சமே என்னால்த் தான் வாழுகின்றது; நான் பண்ணுகின்ற பிராமண்ய கர்மங்களால் நான் பிரம்மாவிற்கும் மேலானவன்” என்று கொக்கரிக்கிறார்கள்
അര്ത്ഥാശക്കു വിരുതു വിളിപ്പിപ്പാന്
അഗ്നിഹോത്രാദി ചെയ്യുന്നിതു ചിലര്
സ്വര്ണന്ഗള് നവരത്നന്ഗളെ ക്കൊണ്ടുമ്
എണ്ണമ് കൂടാതെ വില്ക്കുന്നിതു ചിലര്
മത്തേഭമ് കൊണ്ടു കച്ചവടമ് ചെയ്തുമ്
ഉത്തമ തുരന്ഗന്ഗളതു കൊണ്ടുമ്
അത്രയുമല്ല കപ്പല് വച്ചിട്ടു
മെത്ര നേടുന്നിതര്ത്ഥമ് ശിവ! ശിവ!
அர்தாசக்கு விருது விளிப்பான்
அக்னிஹோத்ராதி செய்யுன்னிது சிலர்
ஸ்வர்ணங்கள் நவரத்ன்ங்களெக் கொண்டும்
எண்ணம் கூடாதெ வில்க்குன்னிது சிலர்
மத்தேபங்களெக் கொண்டு கச்சவடம் செய்தும்
உத்தம துரங்கங்களது கொண்டும்
அத்ரயுமல்ல கப்பல் வச்சிட்டு
எத்ர நேடுன்னிதர்த்தம். சிவ! சிவ!
பெயருக்கும் புகழுக்குமாக சிலர் பொருள் சலவு செய்து அக்னிஹோத்திரம் போன்ற யாகங்கள். செய்கிறார்கள்.குதிரைகள், யானைகள் வியாபரம் செய்து பொருளீட்டுகிறார்கள். கப்பல் விட்டுக்கூட பொருள் தேடுகிறார்கள். அவர்கள் நேடுகின்ற பொருளினால் என்ன பயன்?
அனித்தியமான இந்த பிரபஞ்சத்தில் நித்தியமான அந்த பிரம்மத்தைத் தேடாமல், பெண், பொன், பொருள், புகழ், ப்தவி, பெயர் எங்கின்ற அனித்தியமான பொருள்களின் பின்னால் ஓடுகிறார்கள்.என்னே பரிதாபம்1 என்று வியக்குகிறார் பூந்தானம்.
இவர்கள் ஒரு முறையாவது பகவத் நாம்ம் சொல்லியிருந்தால் முக்தி கிடைத்திருக்குமல்லவா? இந்த பிரபஞ்சத்தில் மறுபடியும்  பிறக்க வேண் டியிராதல்லவா?அவர்க்கள் பாப ஜன்மங்கள் !
நாமாவது அப்படியில்லாமல் பகவன் நாம்ம் சொல்லிப்ம் பாடுவோம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே



ஞானப்பானா-கிருஷ்ணகீதை 30

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 30


அத்தியாயம் 30

மனிதப் பிறவியின் மகிமை

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

എത്ര ജന്മമ് പ്രയാസപ്പെട്ടിക്കാലമ്
അത്ര വന്നു പിറന്നു സുക്രിതത്താല്
എത്ര ജന്മമ് മലത്തില് കഴിന്ജതുമ്
എത്ര ജന്മമ് ജലത്തില് കഴിന്ജതുമ്
എത്ര ജന്മമന്ഗള് മണ്ണില് കഴിന്ജതുമ്
എത്ര ജന്മമ് മരന്ഗളായ് നിന്നതുമ്
எத்ர ஜன்ம்ம் ப்ரயாஸப்பெட்டிக்காலம்
அத்ற வன்னு பிறன்னு சுக்ருத்த்தால்
எத்ற ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மங்கள் மண்ணில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மம் மரங்களாய் நின்னதும
எத்தனையெத்தனை ஜன்மத்திற்குப் பின் இந்த மனித ஜன்மம் கிடைத்திருக்கிறது? எண்ணற்ற புண்ணிய கர்மங்களின் பலனாக இந்த மனித ஜன்ம்ம் கிடைத்துள்ளது.எத்தனையோ ஜன்மங்கள் புழுவாகவும் பூச்சியாகவும், புல்லாகவும் மரமாகவும் சேற்றிலும் அழுக்கிலும் கிடந்து உழன்றபிறகு மனித ஜன்மம் கிடைத்துள்ளது.ணிரிலும் நிலத்திலும் வாழ்ந்து இறந்தும் பிறந்தும் பல ஜன்மங்கள் கழிந்து மனித ஜன்ம்ம் கிடைத்துள்ளது
എത്ര ജന്മമ് മരിച്ചു നടന്നതുമ്
എത്ര ജന്മമ് മ്രിഗന്ഗള് പശുക്കളായ്
അതു വന്നിട്ടിവണ്ണമ് ലഭിച്ചൊരു
മര്ത്യജന്മത്തിന് മുമ്ബേ കഴിച്ചു നാമ്
எத்ர ஜன்ம்ம் அரிச்சு நடன்னதும்
எத்ர ஜன்ம்ம் ம்ரிகங்கள் பசுக்களாய்
அது வன்னிட்டிவண்ணம் லபிச்சொரு
மர்த்ய ஜன்மத்தின்மும்பே கழிச்சு நாம்
இந்த மனித ஜன்மத்திற்கு முன் பசுவாகவும் மற்ற மிருகங்களாகவும் பிறந்தோம் இறந்தோம்.பிறகு தான் மனித ஜன்மம் கிடைத்துள்ளது.
എത്രയുമ് പണിപെട്ടിന്ഗു മാതാവിന്
ഗര്ഭപാത്രത്തില് വീണതറിന്ജാലുമ്
எத்ரயும் பணிபெட்டிங்கு மாதாவின்
கர்ப்பாத்ரத்தில் வீணதறிஞ்சாலும்
எவ்வள்வு கஷ்டங்களுக்குப் பின் தாயின் கருப்பையில் வந்து சேர்ந்தோம்
പത്തുമാസമ് വയറ്റില് കഴിന്ജു പോയ്
പത്തുപന്തീരാണ്തുണ്ണിയായിട്ടു പോയ്
തന്നെത്താനഭിമാനിച്ചുപിന്നേടമ്
തന്നെത്താനറിയാതെ കഴിയുന്നു
பத்து மாசம் வயற்றில் கழிஞ்ஜுபோய்
பத்துபந்தீராண்டுண்ணியாயிட்டு போய்
தன்னெத்தானபிமானிச்சுபின்னேடம்
தன்னெதானறியாதெ கழியுன்னு
பத்து மாதம் தாயின் கர்பத்தில் இருந்தோம்; பிறந்தபின் பத்து பன்னீரெண்டு வருடங்கள் ஒன்றும் தெரியாத பால்ய பருவத்தில் –விவேகம் உதிக்காத நிலையில் எது சத்தியம்; எது நசுவரம்; எது நித்தியம் என்று அறியாத நிலையில் ‘ நான்” என்ற அகம்பாவத்துடன் இந்த உலகில் வாழ்ந்து விடுகிறோம்.
ഇത്ര കാലമിരിക്കുമിനിയെന്നുമ്
സത്യമോ നമുക്കേതുമൊന്നില്ലല്ലോ
നീര്പ്പോളപോലെയുള്ളോരു ദേഹത്തില്
വീര്പ്പുമാത്രമിന്ഗനെ കാണുന്നു
இத்ரகாலமிரிக்குமினியென்நும்
சத்யமோ நமுக்கேதுமொன்னில்ல்ல்லோ
நீர்ப்போளபோலேயுள்ளொரு தேஹத்தில்
வீர்ப்புமாத்ரமிங்கனெ காணுன்னு
இன்னும் எத்தனைகாலம் இந்த பூமியில் வாழ்வோம் என்று நமக்குத் தெரியாது.நமது வாழ்வு ஒரு நீர்குமிழி போன்றது.எப்பொழுது வேண்டுமென்றாலும் அது உடைந்து நீரோடு சேர்ந்து விடலாம்
அது வரை எலும்பும் சதையும் ரத்தமுமான இந்த தேஹத்தில் வாழ்ந்துதானாக வேண்டியுள்ளது.
ഓര്ത്തറിയാതെ പാടുപെടുന്നേരമ്
നേര്ത്തു പോകുമതെന്നേ പറയാവൂ
അത്രമാത്രമിരിക്കുന്ന നേരത്തു
കീര്ത്തിച്ചീടുന്നതില്ല തിരുനാമമ്
ஓர்த்தறியாதெ பாடுபெடுன்னேரம்
நேர்த்துபோகுமதென்னே பறயாவூ
அத்ரமாத்ரமிரிக்குன்ன நேரத்து
கீர்த்திச்சீடுன்னதில்ல திருனாமம்
அப்படிப்பட்ட அனித்தியமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரு நேரமாவது பகவன் சொல்லுகின்றோமா? இல்லையே இப்படி நமது கிடைப்பதற்கரிய வாழ்வை வீணாக்கலாமா ?பூன்தானம் அங்கலைக்கிறாற்.

    நாம் அவருடன் சேர்ந்து பாடுவோம்: ஞானப்பானா கிருஷ்ண கீதை 17

அத்தியாயம் 17 ஒன்றும் மூன்றும் -2

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

 

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

 


முன் அத்தியாயத்தில் மூர்த்தி த்ரயத்தையும் முப்பெரும் தேவிகளைக் குறித்தும் விளக்கினோம் தேவனான பரபிரம்ம்மும் பிரகிருதியும் சேரும் பொழுது பிரபஞ்சம் உண்டாகிறது என்று சொல்லக் கண்டோம்..அதில் ஆதி
பிரகிருதி ஜலரூபத்தில் இருக்கின்றபொழுது புருஷனாகிய பரமனின்  பீஜம் விழுவதன் மூலம் அண்டம்” –கரு உருவாகிறது. அந்த அண்டத்திலிருந்து ஆதி சிருஷ்டிகர்த்தாவான பிரம்மா தோன்றுகிறார். பிறகு பிரம்மா இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறார். இந்த விவரங்கள் மனுஸ்மிருதியில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

                     ஸோஅபித்யாய சரீரால் ஸ்வால்                                                                                        ஸிஸ்ருக்ஷுர்விவிதா: ப்ரஜா:

                     அப ஏவ ஸ்ஸர்ஜ்ஜாதௌ

                     தாஸு பீஜமவா ஸ்ருஜல்.

                      த்தண்டமபவத்தைம்ம்

                     ஸஹஸ்ராம்சுஸமப்ரபம்

                    தஸ்மிஞ்சஞ்ச ஸ்வயம் பிரம்மா

                   ஸர்வலோகபிதாமஹ:

                                     (மனுஸ்ம்ரிதி 1-8-9)
புருஷோத்தமன் தியானம் செய்து தனது உடலிலிருந்து பல உயிரினங்களை தோற்றுவிக்கும் எண்ணத்துடன் முதலில் ஜலத்தை உற்பத்தி செய்தார்.
அது  தங்க நிறத்தோடுகூடிய சூரியனின் ஒளியுடன் கூடிய ஒரு அண்டமாக உருவெடுத்த்து. அதிலிருந்து சகல பிரபஞ்சத்தின் பிதாமஹனான பிரம்மா தோன்றினார்.
இங்கு ஜலம் என்று கூறியிருப்பது மூலபிரகிருதியைக் குறிக்கிறது. அவ்வாறு புருஷனும் பிரகிருதியும் சேர்ந்து பிரம்மா தோன்றினார்.
பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி விஷ்ணு புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜட வஸ்துக்களும் பிற்பாடு, தாவர வர்க்கமும் உருவாயின. மூன்றாவதாகத்தான் மனிதனல்லாத ஜீவராசிகள் தோன்றின.கடைசியாகத்தான் மனிதன் தோன்றினான். கல்பாந்தரங்களில் உளவான விசித்திரங்களின் பயனாக இந்த நியதி இப்பொழுதும் மாறுபடுகின்றன. புதிய புதிய செடிகொடிகளும் உயிரினங்களும் இன்னும் அவ்வப்பொழுது தோன்றுகின்றன.
ஐதரேய ப்ராம்மணத்தில் இந்த பரிமாண வளர்ச்சியை விவரமாக விளக்கியுள்ளார்கள் நமது ஆசாரியர்களும் முனிவர்களும்.

    ஆத்மானமாவிஸ்தாராம்  வேதக்னதே ஹாவிர்பூய:

   ஓஷதிவனஸபதயோ யச்ச  கிஞ்ச ப்ராணப்ருல் ஸ ஆத்மான்மாவிஸ்தாராம் வேத:

    ஓஷதி வனஸ்பதிஷு ஹி ரஸோ த்ருஸ்யதே

   சித்தம் ப்ராணப்ருல்ஸு, ப்ராணப்ருல்ஸு த்வேவாவிஸ்தார்மாத்மா

    தேஷு ஹி ரசோஅபி த்ருஸ்யதே- சித்தமிதரேஷு

    புருஷே த்வேவாவிஸ்தராத்மா ஸ ஹி ப்ராஞ்சானே சம்பன்னதம: 

   விஞ்ஞானம் வத்தி விஞ்ஞதம் பஸ்யதி- வேத ஸ்வஸ்தனம்- வேத லோகாலோகௌ

        மர்த்த்யேனாம்ருதம் ஈப்ஸதி ஏவம் ஸம்பன்ன:-அதேதரேஷாம் பசுனாமசனாபிபாஸே

   ஏவாபிவிஞ்ஞ்சானம் -ந விஞ்சஞ்சாதம் வதந்தி-

      விஞ்சாஞ்சாதம் பஸ்யந்தி ந விது: ஸ்வஸ்தனம் ந லோகாலோகௌ

  த ஏதாவந்தோ பவந்தி-யதா ப்ரஞ்சாஹி ஸம்பவா:

                             
அவர்பரமபுருஷன்- தோன்றியதை யாதொருவன் ஆத்மாவாக உணருகிறானோ, அவன் பரமானந்த்த்தை அடைகிறான். செடிகொடிகள், மற்றும் எல்லா உயிரின்ங்களும் ஆத்மாவின் உருவகங்களே என்று அவன் அறிகிறான். தாவர வர்க்கங்களில் சக்தி நீர் ரூபத்தில் -ரசமாக- காணப்படுகிறது. உயிருள்ளவையில் எல்லாம் மனம் தோன்றுகிறது; ஆத்மாவும் தோன்றுகிறது.;ரசமும்( சக்தியு) காணப்படுகிறது.ஆனால் மனித ஜாதியில் மனம்     மிகவும் சக்தி வாய்ந்த்தாக அமைகிறது.அறிவும்-ஞானமும் அவனில் மிகுந்து காணப்படுகிறது. அவன் அறிவதை அவன் சொல்ல முடிகிறது; அவன் அறிவதை அவன் காண முடிகிறது; நேற்று நடந்தவையை அவனால் நினைந்து கூற முடிகிறது;திர்சியங்களையும்காண்பதையும், அதிருசியங்களையும் காணாதவையையும் அவன் அறிகிறான்.மரணம் உறுதி என்பதால் மரணமின்மையை விரும்புகிறான்.மற்ற உயிரின்ங்களுக்கு பசியும் தாகமும் மட்டும் தான் உண்டு.மனிதனுக்கோ ஞானம் அறிவு என்ற ஒன்று அதிகமாக உள்ளது.மற்ற உயிரினங்களால் அறிந்ததை சொல்லமுடிவதில்லை; அறிவதை அவை காண்பதில்லை; நேற்று நடந்தவை அவைகளின் நினைவில் இருப்பதில்லை;திருசியாதிருசியங்களை அவைகள் அறிவதில்லை.. அறிவு அள்விற்கேற்ப  அமைகிறது ஜன்மங்கள்.
ஐதரேண்யகம் 2-3-2   
இவ்வாறு தோன்றிய மனித ஜீவராசிகளில் அன்தர்யாமியாக குடிகொண்டுள்ள பரமபுருஷன் பௌதிக தேகத்துடன் பந்திக்கப் படும்பொழுது தேகி என்ப்படுகிறான்.
பகவத் கீதை13 ஆம் அத்தியாயம் முதல் சுலோகத்தில் பகவான் கூறுகிறார்:

                              इदम् शरीरम् कौन्तेय क्षेत्रमित्यमिधीयते !

                              एतयो वेत्ति तम् प्राहू: क्षेत्रन्ज इति तद्दिविदा:  !

இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபீதியதே !

ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹூ: க்ஷேத்ரஞ இதி த்த்வித: !

குந்திபுத்ரா, இவ்வுடல் க்ஷேதிரம் எனப்படுகிறது.இதை அறிகிறவனை க்ஷேத்திரஞன் என்று ஞானிகள் சொல்லுகிறார்கள்.
க்ஷேத்திரம் என்றால் எது கெட்டு போகாமல் காப்பாற்றப் பட வேண்டியுள்ளதோ அது என்று பொருள்.அதன் இன்னொரு பொருள் வயல்’. வயல் உழைப்பிற்கேற்ற விளை தரும்.பூமியிலி-வயலில்- நல்லதும் விளையும்; கெட்ட்தும்- உபயோகமற்றதும் விளையும்.வினை விதைத்தால் வினை விளையும்; தினை விதைத்தால் தினை விளையும். பலன் கர்மங்களைப் பொறுத்து இருக்கும். அது போல் எவ்விதம் நாம் நமது உடலாகப்பட்ட க்ஷேத்திரத்தை பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ற பலன் கிடைக்கும் .நம் உடல் எனும் க்ஷேத்திரத்தில் மனம், புத்தி, இந்திரியங்கள் என்பவை உள்ளன. அவைகளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதற்கு தகுந்த பலன் கிடைக்கும்.
அடுத்த சுலோகத்தில் பகவான் சொல்லுகிறார் எல்லா க்ஷேத்திரங்களிலும் பரமாத்மா எனும் க்ஷேத்திரஞனே குடியிருக்கிறான்.இந்த அறிவே ஞானம் எனப்படுகிறாது.
க்ஷேத்திரம் எனும் உடல் பிரகிருதியைக் குறிக்கிறது.க்ஷேத்திரஞன் எனும் பரமாத்மா பரம புருஷனைக் குறிக்கிறது.பிரகிருதியின் சேர்க்கையால் ஏற்படும் குண மாற்றங்களை எப்பொழுது புருஷாத்மா தனது என்று எண்ண ஆரம்பிக்கிறானோ அப்பொழுது அவன் ஜீவாத்மா ஆகிறான்.பிரகிருதி பேதம் எண்ணிலடங்கா; ஆகவே ஜீவாத்மாக்களும் எண்ணிலடங்காத வேற்றுமைகளுடன் காணப்படுகிறது.பிரகிருதியுடன் சேர்ந்திருந்து அதன் குண நலங்களால் பாதிக்கப்படாத ஜீவாத்மாக்கள் முக்தர்கள்.
அதே அத்தியாயத்தில் பகவான் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
शत्वम् रजश्तम इति गुणा: प्रक्रुतिशम्बवा:  !
निबत्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम्.!!

:              ஸத்வம் ரஜ்ஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா: !

             நிபத்ன்ந்தி   மஹாபாஹோ தேஹே தேஹினமவ்ய்யம் !!

பெருந்தோளுகளுடைய அர்ஜுனா, பிரகிருதியிலிருந்து உளவாகின்ற சத்வம்,ரஜஸ், தமோ குணங்கள் அழிவற்ற தேஹியை தேஹத்துடன் பிணைக்கின்றன.
பிரகிருதி முக்குணங்களையுடைது என் முன்னொரு அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் பிரகிருதி வேறு, இந்த குணங்கள் வேறல்ல.உஷ்ணமும் அக்னியும் எப்படி வேற்படுத்தி பார்க்க முடியாதோ அதே போல் பிரகிருதியையும் அதன் குணங்களையும் வேறுபடுத்த இயலாது..இந்த குணங்களால் க்ஷேத்திரஞனான பரமாத்மா பாதிக்கப்படுவதில்லை. ஆனால் ஜீவாத்மா பதிக்கப்பட்ட்து போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. அது ஒரு மாயத் தோற்றம்.நீரில் தெரிகின்ற சூரியனின் பிரதி பிம்பம் நீர் அசையும் பொழுது அசையும்; ஆனால் சூரியன் அசைவதில்லை.அதே போல் ஜீவாத்மா பிரகிருதியின் குணங்களில் கட்டுப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. அந்த உண்மையற்ற நிலையை உண்மை என்று எண்ணி கர்ம்ம் இயற்றும்பொழுது அதன் பலன்கள் ஜீவாத்மாவை பாதிக்கின்றது.
இதைத் தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயம் 25 ஆம் சுலோகத்தில் கூறினார்:                          

                        प्रक्रुते: क्रियमाणानि गुणैइ: कर्माणि सर्वच: !

                        अहन्गारविमूदात्मा कर्ताहमिति मन्यते !!

                                    .கீ. அத் 3 சுலோ 26

               ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வாச: !

              அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மன்யதே !!

பிரக்ருதியின் குணங்களால் ஜீவாத்மா பாதிக்கப்படுகிறது. .ஜீவாத்மா கர்மங்கள் செய்யத் தூண்டப்படுகிறது.. கர்மங்கள் ஆற்றப்படுன்றபொழுது நம்முள் ஜனிக்கும் அஹம்என்ற உணர்வு நாம் தான் கர்மங்கள் இயற்றுகிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த கர்த்ருத்வமனோபாவம் தான் கர்மபலங்களின் ஊற்றுக்கண். இந்த நேரத்தில் ப்ரகிருதி வேறு, நிஜமான நான்வேறு என்று உணராத நிலைமை ஏற்படுகிறது.அக்ஞானத்தின் ஆரம்பம் உதயமாகிறது. தனக்குஅன்னியமான ஒன்றை தனதுஎன்ற எண்ணம் தான் அஹங்காரம். மேலும் பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்.
அதுவரை பாடுவோம்:
கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே